புதிய மாற்றத்திற்காக நான் வாக்களித்துவிட்டேன்! வாக்குப்பதிவின் பின்னர் அங்கஜன்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையிலான சுகாதார பாதுகாப்பு முறைகளுடன் இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலிலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளில் நாடளாவிய ரீதியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அரசியல் முக்கியஸ்தர்களும் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின், அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, புதிய மாற்றத்திற்காக நான் வாக்களித்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.