கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 3.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 3.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்!

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின் படி, இதுவரை 35 இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக, 71 இலட்சத்து 98 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 4 இலட்சத்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்தும் விளங்குகின்றது.

இதுவரை அமெரிக்காவில் 20 இலட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 இலட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக பிரேஸில், ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.