மித்தெனிய முக்கொலை சம்பவம்: மற்றுமொரு சந்தேக நபர் கைது

மித்தெனிய முக்கொலை சம்பவம்: மற்றுமொரு சந்தேக நபர் கைது

மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால், குட்டிகல பொலிஸ் பிரிவின் பதலங்கல பகுதியில் வைத்து நேற்று (08)  39 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர் என்றும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குட்டிகல, பதலங்கல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மித்தெனிய முக்கொலை சம்பவம்: மற்றுமொரு சந்தேக நபர் கைது | Mitheniya Triple Murde Another Suspect Arrestedகடந்த 18 ஆம் திகதி நடந்த "கஜ்ஜா" என்ற அருண விதானகமகேவும் அவரது இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்  இதுவரை 12 சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மித்தெனிய பொலிஸாரும், தங்காலை குற்ற பிரிவு  விசாரணை பணியகமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.