விராட் கோலி ரசிகர்களுக்கு வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

விராட் கோலி ரசிகர்களுக்கு வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதாக வெளியாகி உள்ள தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி நாளை டுபாயில் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இன்று டுபாயில் இடம்பெற்ற பயிற்சியின் போது விராட் கோலியின் முழங்கால் பகுதியில் பந்து பட்டு உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விராட் கோலி ரசிகர்களுக்கு வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் | Shocking News For Virat Kohli Fans

இதனையடுத்து பயற்சியை உடனடியாக இடைநிறுத்தி அங்கிருந்து அவர் வெளியேறியதாக கூறப்படுகிறது.

எனினும் விராட் கோலிக்கு லேசான வலியே ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் கூறியுள்ளார். எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பயிற்சியை இடைநிறுத்தினார்.

அவரது உபாதை தீவிரமானது கிடையாது. எனவே நாளை இறுதிப்போட்டியில் விராட் கோலி நிச்சயம் விளையாடுவார் என கண்காணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.