கிளிநொச்சி மாவட்ட விவசாய மீளாய்வு குழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட விவசாய மீளாய்வு குழு கூட்டம்

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் நவீன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. 

இந்த கலந்துரையாடல் இன்று (08.03.2025) காலை 9.00 மணிக்கு வட மாகாண ஆளுநர் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்பொது நவீன முறையில் விவசாயத்தை மேற்கொள்ளும் போது சேதன பசளை பயன்படுத்தும் விவசாயிகள் இயற்கை பசளைக்கு மாறுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட விவசாய மீளாய்வு குழு கூட்டம் | Provide Fertilizer Subsidy To Paddy Growers

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் விவசாயம் தொடர்பான திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை சுதந்திரப் பறவைகளின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வு கூட்டுறவு மண்டபத்தில் 08.03.2025 இன்று காலை 10.00 மணியளவில் சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் தலைவி முராளினி தினேஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி.வி.கே சிவஞானம் ஆகியோர்கள் பிரதமர் அதிதிகளாக கலந்து கொண்டு பன்னாட்டு மகளிர் தினத்தை சிறப்பித்துள்ளார்.