வைத்தியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!

வைத்தியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!

எதிர்காலத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை  அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தி்ல் இன்றையதினம் (4) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வைத்தியர்களுக்கான அடிப்படை வேதனம், மேலதிக சேவைக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, வருடாந்த சம்பள அதிகரிப்பு, மற்றும் உழைக்கும் போதான வரி (Paye Tax) செலுத்துவதில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தமது கொடுப்பனவுகளை துண்டித்ததால் மார்ச் 5ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு! | Salary Increase For Doctors Nalinda Jayathissa

வரலாற்றில் முதற் தடவையாக யாரும் எதிர்பார்க்காத வகையில் எமது அரசாங்கம் சம்பள அதிகரிப்பை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கவுள்ளது.

இதற்கு முன்னர் சிறியதொரு கொடுப்பனவே வழங்கப்பட்டதுடன் தற்போது அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.” என தெரிவித்தார்.