வாகன விபத்தில் யுவதி பலி

வாகன விபத்தில் யுவதி பலி

இரத்தினபுரி - பானந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பானந்துறையில் இருந்து இரத்தினபுரி நோக்கி கவனயீனமாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்படும் போதே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பண்டாரஹேன, கெடலியம்பல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். 

வாகன விபத்தில் யுவதி பலி | Young Woman Dies Due Of Tipper Driver

சடலம் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பொலிஸார் எசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர்.