மின்வேலியில் சிக்கிய தந்தைக்கு நேர்ந்த சோகம்

மின்வேலியில் சிக்கிய தந்தைக்கு நேர்ந்த சோகம்

மாத்தளை - யட்டவத்த, வாலவெல பகுதியில் விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒருவர், வனவிலங்குகளிடமிருந்து நெற்பயிர்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி  இன்று (02) உயிரிழந்துள்ளதாக யடவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்வேலியில் சிக்கிய தந்தைக்கு நேர்ந்த சோகம் | Father Got Caught In Electric Fenceஉயிரிழந்தவர் நாவுல, ஓபல்கல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய  மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக வயலுக்கு மின்சாரம் இணைத்த  உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.