
தொடருந்தில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பலி
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்தில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளது.
பதுளை மற்றும் ஹாலிஎல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் நடைமேடையில் தொங்கி செல்ஃபி எடுக்க முயன்ற போது, பாறையில் மோதி தொடருந்திலிருந்து குறித்த சுற்றுலாப் பயணி விழுந்துள்ளார்.
படுகாயமடைந்த அவர், பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான 53 வயதான பெர்மினோவா ஓல்கா என்ற பெண்ணே இவ்வாறு இறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.