ஜனநாயகக் கடைமையை நிறைவேற்றினார் அங்கஜன்

ஜனநாயகக் கடைமையை நிறைவேற்றினார் அங்கஜன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று (புதன்கிழமை) காலை தனது வாக்கினை பதிவு செய்தார்.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி, அளவெட்டி  சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் அவர் தனது வாக்கினை ஜனநாயக முறைப்படி பதிவு செய்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.