இனவெறிக்கு எதிராக ஐந்து கண்டங்களிலும் திரளும் மக்கள்.. எல்லாம் படுதோல்வி - வசமாக மாட்டிக்கொண்ட ட்ரம்ப்!
அமெரிக்காவில், ஜார்ஜ் என்ற கருப்பினரின் கொலை சம்பவமானது, உள்நாட்டு பிரச்சினையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது.
லட்சக்கணக்கான கருப்பின மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இவர்களின் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டத்தை அடக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. மேலும் இவரது 2ஆவது மனைவி மற்றும் மகளும் குறித்த போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர். இதனால் ட்ரம்ப் பெரும் இக்கட்டான நிலையில்உள்ளார்.
நிறவெறி, இனவெறிக்கு எதிரான போராட்டம் உலகளாவிய அளவில் உருமாறி உள்ளது. இங்கிலாந்திலும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. லண்டனில் முன்னாள் பிரதமரின் வின்ஸ்ட்டன்ட் சர்ச்சிலின் நினைவு சின்னம் தீது இனவெறி என்று போராட்டக்காரர்கள் எழுதி வைத்தனர்.
மகாத்மா காந்தி சிலை, ஆபிரகாம் லிங்கன் சிலைகளிலும் இனவெறிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது . இங்கிலாந்தில் முன்னாள் எம்பியாக இருந்த அடிமைகளை விற்று பணம் சம்பாதித்த எட்வர்ட் கோஸ்ட்டனின் சிலை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
அந்த சிலையை இழுத்து கொண்டு போய் கடலில் வீசியெறிந்தனர். 125 ஆண்டு காலமாக இருந்த சிலை துவம்சம் செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கி வருகிறது. மேலும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால் யாரையுமே கட்டுப்படுத்த முடியவில்லை.
அவர்களின் ஆவேசத்தை குறைக்க முடியவில்லை.. அவுஸ்திரேலியாவில் கொந்தளித்து உள்ளனர் மக்கள்.. ஐரோப்பியாவின் பெல்ஜியத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்கள் நகரவில்லை.. பிரேசிலில் நடந்த போராட்ட முழக்கங்கள் விண்ணை முட்டி வருகிறது..
அமெரிக்காவில் தடியடி, கண்ணீர் புகை வீசப்பட்டது, மிளகு பொடி கூட அவர்கள் மீது தூவப்பட்டது.. அசராமல் கொட்டும் மழையிலும் போராட்டம் வெடித்து வருகிறது.
அமெரிக்காவில்தான் போராட்டம் ஆரம்பமானது என்றாலும், இன்று ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என 5 கண்டங்களிலும் மக்கள் திரண்டுள்ளது சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. உலக வரலாற்றை திருப்பி போட மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.