தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் 4 மணிக்குப் பின்னர் வாக்களிக்க நடவடிக்கை
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்தவர்கள் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்குப் பின்னர் வாக்களிக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
எனினும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனிமைப்படுத்தலை நிறைவுசெய்தவர்கள் தங்கள் குடும்பங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு தங்கள் சொந்த போக்குவரத்து முறைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த பின்னர் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கும் இந்த செயன்முறை பொருந்தும் என்றும் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
எனினும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.