மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி ; பொலிஸ் உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்

மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி ; பொலிஸ் உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்

முல்லைத்தீவில் பாடசாலைக்குள் நுழைந்த காவல்துறை உத்தியோகத்தர் மதுபோதையில் ஒருவர் மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (17) முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி ; பொலிஸ் உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல் | Attempt Misbehave Students Police Act Indecently

முல்லைத்தீவு - மல்லாவி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலையில் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.

இந்தநிலையில், முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்த காவல்துறை உத்தியோகத்தர், மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து தகாதமுறையில் ஈடுபட முற்பட்ட போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி ; பொலிஸ் உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல் | Attempt Misbehave Students Police Act Indecentlyமூன்று மாணவிகளுடன் இவ்வாறு தவறாக நடக்க அவர் முற்ப்பட்டுள்ள நிலையில், மாணவிகள் குறித்த விடயத்தை வெளியே கூறியதன் பின்னர் அங்கிருந்தவர்கள் குறித்த காவல்துறை உத்தியோகத்தருடன் முரண்பட்டுள்ளனர்.

இதையடுத்து, சம்பவம் குறித்து மல்லாவி காவல் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மதுபோதையில் இருந்தார் என்பதனை உறுதிப்படுத்துவதற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை தரப்பு குறித்த காவல்துறை உத்தியோகத்தரை தப்பிக்க வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.