வவுனியாவில் சிவசக்தி ஆனந்தன் வாக்களித்தார்

வவுனியாவில் சிவசக்தி ஆனந்தன் வாக்களித்தார்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்று(புதன்கிழமை) காலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்றுவருகின்றது.

வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை அளித்தார்.

இம்முறை தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் உறுதிமிக்க அரசியல் தலைமைத்துவம் ஒன்று வரும் என வாக்களிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.