16 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

16 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

கல்கிஸை கடலில் நீராடச்சென்ற சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்கிஸை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன, இதன் போது கங்கொடவில பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே  இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம் | 16 Year Old Boy Drowns And Disappears

பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு, குறித்த சிறுவன் நண்பர்களுடன் இவ்வாறு கடலுக்கு நீராடச் சென்றிருந்த வேளையிலேயே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு மற்றும் கல்கிஸை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை ​பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.