குடத்தனையில் வாக்களித்தார் எம்.ஏ சுமந்திரன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ சுமந்திரன் குடத்தனை அ.த.க வித்தியாலையத்தில் வாக்களித்துள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
166 தொகுதிகளில் இருந்து 196 பேரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இம்முறை தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற்றுவரும் நிலையில் சுமந்திரன் இன்று காலை வாக்களித்துள்ளார்.