கல்வித் துறையில் வடக்கு கிழக்கில் பதவி வெற்றிடங்கள்

கல்வித் துறையில் வடக்கு கிழக்கில் பதவி வெற்றிடங்கள்

இலங்கையின் மேல், கிழக்கு மற்றும் வட மாகாணங்களின் மாகாண கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு, தற்போது, வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள்  இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் I இல் குறைந்தது ஐந்து ஆண்டுகள் திருப்திகரமான சேவைக் காலத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

அத்துடன், தேவையான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கல்வித் துறையில் வடக்கு கிழக்கில் பதவி வெற்றிடங்கள் | Vacancies In Northern Eastern Province

மேலும், 2025 மார்ச் 3 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.