நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 299 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.