பெப்ரவரி மாத எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்

பெப்ரவரி மாத எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்

பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தை எரிவாயு விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிவாயு விலைகள் மாதந்தோறும் திருத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி அறிவிக்கப்படுகின்றன.

பெப்ரவரி மாத எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய தகவல் | Gas Price Reduction For February

இந்த நிலையில், எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அனைத்து பரிந்துரைகளும் ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சின் ஒப்புதல் இல்லாமல் அதை அறிவிக்க முடியாது என்றும் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அத்தோடு, அடுத்த வாரத்திற்குள் எரிவாயு விலை திருத்தம் தொடர்புடைய பரிந்துரைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பெப்ரவரி மாத எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய தகவல் | Gas Price Reduction For February

இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த சில மாதங்களாக, எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதுடன், உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்த போதிலும், மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாத வகையில் எரிவாயு விலையை மாற்றாமல் பராமரிக்க முடிவு செய்ததாக லிட்ரோ நிறுவனம் முந்தைய விலை திருத்தங்களில் சுட்டிக்காட்டியிருந்தது.