பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு | Climate Change Warning For The Public

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.