தொழில் திணைக்களத்தின் பெயரில் மோசடி நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொழில் திணைக்களத்தின் பெயரில் மோசடி நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொழில் திணைக்களத்தினால், வேலைவாய்ப்புகளுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக வெளியிடப்படும் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களமோ அல்லது அதன் அதிகாரத்தின் கீழ் உள்ள எந்த நிறுவனமோ தற்போது எந்தப் பதவிகளுக்கும் விண்ணப்பங்களை கோரவில்லை என்று திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த மோசடியான இடுகைகளுக்கு பதிலளிக்கவோ அல்லது தனிப்பட்ட சான்றுகளைப் பகிர்ந்து கொள்ளவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தநிலையில், மோசடிக்குப் பின்னால் இருப்பவர்களை அடையாளம் காண, தொழில் ஆணையரின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தின் பெயரில் மோசடி நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Fraudulent Activity The Name Of The Dept Industryஅத்துடன், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்கள், வங்கிக் கணக்கு விபரங்கள், தொலைபேசி எண்கள் அல்லது வேறு எந்த தனிப்பட்ட தகவலையும் வெளி தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் குறித்த அதிகாரி பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

இதேவேளை குறித்தமோசடித் திட்டம் தனிப்பட்ட தரவுகளைச் சேகரிப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சந்தேகிப்பதாக தொழில் திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.