சுதந்திர தினம் முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு

சுதந்திர தினம் முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை ஒரு விசேட நிகழ்வாகக் கருதி, 01/2025 சுற்றறிக்கையின் சில விதிகளை செயல்படுத்த வேண்டாம் என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேலும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 1 முதல் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு அனைத்து அரச கட்டிடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சுதந்திர தினம் முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு | Special Notice For Government Institutions

பெப்ரவரி 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், மின்சார பாதுகாப்பு மற்றும் மின் அலங்காரச் செலவு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு,

மின்விளக்குகளால் கட்டிடங்களை அலங்கரிக்கும் செயற்பாட்டை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.