சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2040 ஆண்டளவில் 30 மில்லியனாக அதிகரிக்கக் கூடுமென சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச ரீதியாக 2020ஆம் ஆண்டில் 19.3 மில்லியனாக இருந்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, எதிர்வரும் 15 வருடங்களில் 30 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை | Warning Issued International Research Cancer

இதேவேளை, இலங்கையில் புற்றுநோய் தொடர்பான தேசிய தரவுகளுக்கு அமைய, நாட்டில் பதிவாகும் மரணங்களுக்கு நான்காவது பிரதான காரணியாகப் புற்றுநோய் விளங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் மாத்திரம் 37,753 புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய புற்று நோய் தரவுகள் தெரிவிக்கின்றன.

அவர்களில், அதிகளவானோர் பெண்கள் எனவும் அந்த எண்ணிக்கை 20,171 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.