மீண்டும் உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானம்

மீண்டும் உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானம்

இலங்கையில் உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அனுர குமார தலமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மீண்டும் உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானம் | Decision To Resume Domestic Flight Servicesநாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது கணிசமானளவு அதிகரித்து வரும் நிலையில், விமான நிலையங்களில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 புதிய பதிவு கருமபீடங்களை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.