தொடருந்து சேவைகளில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

தொடருந்து சேவைகளில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

பல புதிய தொடருந்து சேவைகளை அறிமுகப்படுத்த தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக மலையகப் மார்க்கம், தொடருந்து சுற்றுலாப் பயணிகளிடையே, பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் தொடருந்து சேவைக்கான அதிக கேள்வி இருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து சேவைகளில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றங்கள் | New Train Services In Sri Lanka

இதேவேளை ஜனவரி 31ஆம் திகதி முதல் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவையும் தினசரி சேவையில் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

புதிய தீர்மானத்தின்படி, எல்ல- ஒடிஸி - கொழும்பு தொடருந்து சேவையில் மேலதிக பயணத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான எல்லா- ஒடிஸி - கொழும்பு தொடருந்து சேவையில் மேலதிக தொடருந்து பயணத்தை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்தும், பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்தும் புறப்படும்.

இதேவேளை பெப்ரவரி மாதம் முதல் எல்ல - ஒடிஸி - கண்டி மற்றும் எல்ல- ஒடிஸி - நானு ஓயா ஆகிய இரண்டு புதிய தொடருந்து சேவைகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடருந்து சேவைகளில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றங்கள் | New Train Services In Sri Lanka

மேலும், எல்ல - ஒடிஸி - கண்டி தொடருந்து சேவை, பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிக்கும் தெமோதரவுக்கும் இடையில் இயக்கப்படும் என்று தொடருந்து பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எல்ல ஒடிஸி - நானுஓயா தொடருந்து சேவை, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையில் இயக்கப்படவுள்ளது.