கைதிக்கு போதைப் பொருள் வழங்க முற்பட்ட பெண் கைது

கைதிக்கு போதைப் பொருள் வழங்க முற்பட்ட பெண் கைது

வவுனியா சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் வழங்க முற்பட்ட 28 வயது குடும்ப பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் குற்றச் செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் மூன்று மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைதிக்கு போதைப் பொருள் வழங்க முற்பட்ட பெண் கைது | Woman Arrested Attempting Provide Drugs Prisoner

குறித்த குடும்பஸ்தரின் வழக்கு வவுனியா நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு விசாரணைக்காக வருகை தந்த அவரது மனைவி நீதிமன்றத்தில் இருந்து குறித்த குடும்பஸ்தரை சிறைச்சாலை கொண்டு சென்ற போது அவருடன் உரையாடி பொதி ஒன்றை வழங்கியுள்ளார்.

இதில் சந்தேகமடைந்த சிறைக் காவலர்கள் உடனடியாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அப் பொதியில் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது.

பொலிசாரால் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.