180 ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்

180 ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம்

 தாய்லாந்தால் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் இன்று (22) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அதன்படி இன்று 180 ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

180 ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம் | 180 Same Sex Couples Get Married Same Day Thailand

கடந்த ஆண்டு தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமண சட்டத்திற்கு ஆதரவாக 400 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் மட்டுமே அளிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம், தாய்லாந்தில் உள்ள ஒரே பாலினத் தம்பதிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றது.

180 ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு ஒரே நாளில் திருமணம் | 180 Same Sex Couples Get Married Same Day Thailand

அத்துடன் , தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கவும், வாரிசாகப் பெறவும், குழந்தைகளைத் தத்தெடுக்கவும் சம உரிமைகளைப் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.