யாழில் மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீர் மரணம்

யாழில் மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் இளவாலை தெற்கு பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றையதினம்(21.01.2025) இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றையதினம் மதுபானசாலையில் மதுபானம் அருந்திய அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இளவாலை பொலிஸார் அவரது சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

யாழில் மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீர் மரணம் | Man Dies After Consuming Liquor In Jaffna

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.