கல் ஓயா கரை இடிந்து விழுந்ததால் வயல் நிலங்கள் நாசம்

கல் ஓயா கரை இடிந்து விழுந்ததால் வயல் நிலங்கள் நாசம்

கல் ஓயாவின் கரைகள் இடிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கல் ஓயாவை அண்மித்துள்ள பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல் ஓயா கரை இடிந்து விழுந்ததால் வயல் நிலங்கள் நாசம் | Farmlands Destroyed As Kal Oya Riverbank Collapses

இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திகாவபிய ஜனபதய பகுதிக்கு சொந்தமான பல ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நெல் வயல்களில் பல ஏற்கனவே அறுவடைக்கு தயாராகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கல் ஓயாவின் கரைகள் அழிக்கப்பட்டு, அந்த நிலத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதால் இந்த துயரத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.