யாழில் திருமாணமாகி 2 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

யாழில் திருமாணமாகி 2 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் ரயிலில் மோதி திருமணமாகி 2 மாதங்களேயான இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்றையதினம் (13-01-2025) மதியம் 2.30 மணியளவில் மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள ரயில் பாதையில் இடம்பெற்றுள்ளது.

யாழில் திருமாணமாகி 2 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! | Young Family Man Dies Hit By A Train In Jaffna

குறித்த குடும்பஸ்தர் யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயிலில் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் கொடிகாமம், வெள்ளாம்பொக்கட்டி பகுதியை சேர்ந்த 19 வயதான நவரத்தினம் நவாஸ்கரன் என்னும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் திருமாணமாகி 2 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! | Young Family Man Dies Hit By A Train In Jaffna

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.