பாடசாலை ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு : தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு

பாடசாலை ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு : தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு

பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் (ministry of education) ஆலோசித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில், வட மத்திய மாகாணத்தில் (north central povince) தனியார் கல்வி நலையத்தில் கல்வி கற்ற மாணவர்களின் நலனுக்காக, சிங்கள மொழி இறுதி வினாத்தாள் சில ஆசிரியர்களால் கசிய விடப்பட்டது.

பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்விநிலையத்தில் கற்பிப்பதை தடை செய்ய மேற்கு மாகாண கல்வி அதிகாரிகள் முன்னதாக முடிவு செய்திருந்தனர். இருப்பினும், இது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,மாகாண அதிகாரிகளுக்கு இதுபோன்ற முடிவுகளை எடுக்க அதிகாரம் இருந்தபோதிலும், முழு நாட்டிற்கும் பொதுவான அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

"இது ஒரு முழுமையான அணுகுமுறையை ஆதரிக்கும் ஒரு பிரச்சினை. பாடசாலை ஆசிரியர்கள் தங்கள் சொந்த பாடசாலை மாணவர்களிடம் தனியார் கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது. தங்கள் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லாத மாணவர்களை ஆசிரியர்கள் பாகுபாடு காட்டுவதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்," என்று அவர் கூறினார்.

பாடசாலை ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு : தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு | Restrictions On Private Tuition By School Teachersஅனைவருடனும் இது தொடர்பாக கலந்தாலோசித்த பின்னர், தனியார் வகுப்புகளை நடத்துவதில் பொதுவான அளவுகோலை அறிமுகப்படுத்த அமைச்சகம் இப்போது திட்டமிட்டுள்ளது.