யாழில் பெருந்தொகை போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழில் பெருந்தொகை போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ் (Jaffna) நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று காலை (11.01.2025) இடம்பெற்றுள்ளது.

வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன்,  யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.