மாற்றுதிறனாளியை பலியெடுத்த விபத்து
மூன்று சக்கர சைக்கிளில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
இந்த விபத்து பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் இன்று (9) காலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளது . விபத்தில் பலியானவர் கோமாரியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மென்டிஸ் அப்பு விஜயஸ்ரீ ( வயது 71 ) என்பவராவார்.
பல வருடங்களாக அவர் பிரதான வீதியில் செருப்பு தைப்பதும் குடை திருத்துவதும் தொழிலாக கொண்டிருந்தவர்.
இரண்டு கால்களும் இயலாத மாற்றுத் திறனாளியான அவர் மூன்று சக்கர சைக்கிளில் வீட்டிலிருந்து வந்து பிரதான வீதியில் கடை ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு செல்கின்ற பொழுது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது மோதியது .