கொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை

கொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை

உலகளவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை அண்மித்துள்ளது. அதற்கமைய இந்த வைரஸினால் இதுவரையில் 6 இலட்சத்து 97 ஆயிரத்து 189 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

உலக மக்களை பீதியடையச் செய்துள்ள கொடிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் காரணமாக இதுவரையில், ஒரு கோடியே 84 இலட்சத்து 43 ஆயிரத்து 484 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து 1 கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 917 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளான 60 இலட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 64 ஆயிரத்து 677 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முறையே அமெரிக்கா, பிரேஸில், இந்தியா ஆகியன உள்ளமை குறிப்பிடத்தக்கது.