வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபருக்கு நேர்ந்த கதி

வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபருக்கு நேர்ந்த கதி

காலி உனவடுன சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உனவடுன சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே விடுதியில் தங்கியிருந்த நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபருக்கு நேர்ந்த கதி | Man Arrested Sexually Assault Russian Woman

தான் தங்கியிருந்த அறைக்கு அருகில் ஆண் ஒருவர் நிர்வாணமாக வந்து துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக இந்த ரஷ்ய பெண் சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சனிக்கிழமை (28) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது