மத்தள விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் முதன்முறையாக தரையிறங்கிய விமானம்
முதன்முறையாக 180 பல்கேரிய(Bulgaria) சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று (27ம் திகதி) காலை 9.30 மணியளவில் மத்தள விமான நிலையத்தில்(mattala airport) தரையிறங்கியது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சுற்றுலா அமைச்சுக்கும் ஐரோப்பிய விமான சேவைக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த விமானம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.
கடந்த காலங்களில் மத்தள விமான நிலையம் அவசர தரையிறங்கும் இடமாக மட்டுமே மாறியிருந்தது. எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வாரத்திற்கு 15க்கும் மேற்பட்ட விமானங்கள் மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் வந்து செல்கின்றன.
இதுவரை, மத்தள விமான நிலையத்தைப் பயன்படுத்தி வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா மற்றும் தொடர்புடைய நாடுகளில் இருந்து வந்தவர்கள்.
ஆனால் தற்போது ஐரோப்பிய விமான நிறுவனங்களும் சுற்றுலா பயணிகளை மத்தளவுக்கு அழைத்து வருகின்றன. மத்தளவில் இருந்து நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குழு மற்றும் விமான குழுவினரால் மத்தள விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.
யால, உடவலவ, சீகிரியா, பொலன்னறுவை, அநுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் குழு செல்லவுள்ளது.