கூடுதலான வாக்காளர்கள் உள்ள மாவட்டம் எது தெரியுமா?

கூடுதலான வாக்காளர்கள் உள்ள மாவட்டம் எது தெரியுமா?

இம்முறை கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு 17 இலட்சத்து 85 ஆயிரத்து தொள்ளாயிரத்து 64 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் தற்போது 12 இலட்சத்து 19 ஆயிரத்து 395 புதியவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 38 ஆயிரத்து 806 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறைந்த அளவிலான புதிய வாக்காளர்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு நான்காயிரத்து 666 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.