துப்பாக்கிச் சூட்டில் கணவன் பலி - மனைவி படுகாயம்: தொடரும் விசாரணை

துப்பாக்கிச் சூட்டில் கணவன் பலி - மனைவி படுகாயம்: தொடரும் விசாரணை

காலியில் (Galle) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் நேற்றையதினம் (20) 38 வயதுடைய பெத்தும் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, அவருடன் வந்த அவரது மனைவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தம்பதியினர், காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் கணவன் பலி - மனைவி படுகாயம்: தொடரும் விசாரணை | Galle Shooting Husband Dead Wife Injuredஉயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, ​​மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணத்தை கண்டறிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.