14 வயது பாடசாலை மாணவனால் 30 லட்சம் ரூபா நகைகளை இழந்த குடும்பம்! நடந்தது என்ன?

14 வயது பாடசாலை மாணவனால் 30 லட்சம் ரூபா நகைகளை இழந்த குடும்பம்! நடந்தது என்ன?

களுத்துறையில் 14 வயதுடைய பாடசாலை மாணவனிடம் கையடக்க தொலைபேசி வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாக்கு அதிகமான பணம் மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவத்தில் 18 வயது மற்றும் 21 வயதுடைய ஏத்தகம மற்றும் மங்கோன பகுதிகளை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

14 வயது பாடசாலை மாணவனால் 30 லட்சம் ரூபா நகைகளை இழந்த குடும்பம்! நடந்தது என்ன? | Kalutara Family Lost 30 Lakh Worth Of Jewellery

பயாகல பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவன் தனது தந்தை வழங்கிய கையடக்க தொலைபேசியை தொலைத்துள்ளார்.

இந்த நிலையில் அயல் வீட்டில் வசிக்கும் அதே வயதுடைய நண்பரின் மூத்த சகோதரனிடம் கையடக்கத் தொலைபேசி ஒன்றை கோரியுள்ளார்.

அதற்காக கொஞ்சம் பணம் அல்லது தங்கப் பொருட்களை தருமாறு இந்த மாணவனிடம் அவர் கூறியுள்ளார்.

14 வயது பாடசாலை மாணவனால் 30 லட்சம் ரூபா நகைகளை இழந்த குடும்பம்! நடந்தது என்ன? | Kalutara Family Lost 30 Lakh Worth Of Jewellery

இதன்படி, குறித்த மாணவன் தனது வீட்டின் அலமாரியில் இருந்த சுமார் 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சந்தேக நபருக்கு, 3 தடவைகள் கொண்டு வந்து கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான சந்தேக நபர் அவற்றை 2 இடைத்தரகர்கள் மூலம் மூன்று முறை அடமானம் வைத்து, சுமார் 17 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார்.

இதனையடுத்து, மாணவருக்கு ட்ரோன் கமராக்கள், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள், ஆடைகள் ஆகியவற்றையும் கொடுத்துள்ளார்.

14 வயது பாடசாலை மாணவனால் 30 லட்சம் ரூபா நகைகளை இழந்த குடும்பம்! நடந்தது என்ன? | Kalutara Family Lost 30 Lakh Worth Of Jewellery

வீட்டிலிருந்த தங்க நகைகள் காணாமல் போனமை குறித்து சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், விற்கப்பட்ட மற்றும் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை விசாரணைகளின் பின்னர் பொலிஸார் மீட்டுள்ளனர்.