14 வயதான சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மாயம்

14 வயதான சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மாயம்

குருநாகல் - தெதுறு ஓயா ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த 14 வயதான சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். தெதுறு ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இரு சிறுமிகள் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி ஒருவர் கரையொதுங்கி உயிர் தப்பியுள்ளதுடன் மற்றைய சிறுமி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

14 வயதான சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மாயம் | A 14 Year Old Girl Drowns And Disappears

காணாமல்போன சிறுமி 14 வயதுடைய கொபேய்கனே பகுதியை சேர்ந்தவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காணாமல்போன   சிறுமி உட்பட  பல சிறுவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் தெதுரு ஓயாவை பார்வையிடுவதற்காக சென்றுள்ளதாகவும் இதன்போது ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போதே அனர்த்தம் நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை நிக்கவரெட்டிய சுழியோடி படைப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார் காணாமல்போயுள்ள சிறுமியை தேடும் பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.