வைத்தியர்களின் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

வைத்தியர்களின் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி | Cabinet Approves Increase Retirement Age Doctors

அதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரச பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முன்னதாக, மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆகக் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.