நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுபாடு: அநுர அரசின் தீர்மானம்

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுபாடு: அநுர அரசின் தீர்மானம்

ஜனாதிபதி தலைமையில் வர்த்தக அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச காணிகளில் விளையும் தேங்காய்களை சதொச ஊடாக நிவாரண விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமித வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(18) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இதனைத் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,“தேங்காய்களை இலகுவில் இறக்குமதி செய்ய முடியாது. அது சிக்கலான பிரச்சினையாகும். 

10,000ற்கு மேற்பட்ட ஏக்கருக்கும் தென்னந்தோட்டங்களுக்கும் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேல் உரம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே விளைச்சல் குறைவடைந்துள்ளது.

55,000 மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையில் 25,000 மெட்ரிக் தொன் உரத்தை தேங்காய் விளைச்சலுக்காக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுபாடு: அநுர அரசின் தீர்மானம் | Coconuts Provides Subsidized Prices In Sathosa

5 ஏக்கருக்கும் குறைவான தேங்காய் விளைச்சல் நிலங்களைக் கொண்டவர்களுக்கு அடுத்த வாரம் முதல் உரத்தை பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி தெங்கு உற்பத்தி ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.