தேர்தல் தொடர்பில் யாழ். அரசாங்க அதிபர் தெரிவித்த முக்கிய விடயம்
எதிர்வரும் 5ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலினை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரச கட்சி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இன்றைய தினத்திலிருந்து யாழ்ப்பாண தேர்தல் அலுவலகம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இயங்க ஆரம்பிக்கிறது நாளை காலை 8 மணியிலிருந்து மூன்று பிரிவுகளாக வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன குறித்த பணியில் பொலிசார் சுகாதாரப் பிரிவினரின் ஒத்துழைப்போடு குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது மேலும் நாளை மறுதினம் 5 ஆம் திகதி அதிகாலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வாக்களிப்பு இடம்பெற உள்ளது. அனைத்து வேட்பாளர்களும் அதிகாலையிலேயே சென்று தமது வாக்குகளை அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.