இலங்கையில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!

இலங்கையில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!

கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிசோகொட்டுவ பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மகன் தாக்கியதில் தாய் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம் (15-12-2024) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... தாயை கொடூரமாக கொலை செய்த மகன்! | The Son Beat His Mother To Death In Sri Lankaஇச்சம்பவத்தில் கல்பாய, பல்லேபெத்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் குறித்து நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.