அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு : காரணத்தை அம்பலப்படுத்திய அமைச்சர்

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு : காரணத்தை அம்பலப்படுத்திய அமைச்சர்

நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையீடே காரணமென வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை பத்திரிகையொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “பண்டிகைகளின் போது பொருட்களின் விலை அதிகரிப்பது சந்தையில் பொதுவான நிலை.

எனவே, எதிர்காலத்தில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையிட்டு நாட்டில் பொருட்கள் பற்றாக்குறையை உருவாக்கினர்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்கிறோம், சந்தையில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு : காரணத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் | Lanka Sathosa Reduces Prices Essential Food Items

தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்கள் மூலம் தலையிடுவதற்கு அரசாங்கமாக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

குறிப்பாக சதொச மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை 25% குறைக்கப்படுகிறது அத்தோடு பண்டிகைக் காலங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.