கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நபர்; தகராறில் விபரீதம்

கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நபர்; தகராறில் விபரீதம்

கேகாலை, வரகாப்பொல மாயின்னொலுவ பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக வரகாப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாயின்னொலுவ தொரவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நபர்; தகராறில் விபரீதம் | Man Beaten To Death With Stone Kegalleஇரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பில் 74 வயதான சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுளதுடன்,  மேலதிக விசாரணைகளை வரகாப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.