இலங்கையில் கோர விபத்து - வெளிநாடு செல்லத் தயாராக இருந்து இளைஞன் பலி
சிலாபம் ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
சிலாபத்தை பகுதியை சேர்ந்த 18 வயதான தினுக ஷஷேந்திர பெரேரா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலில் இரண்டு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞன், வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக தயார் நிலையில் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.