வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட நபர் - இளம் தம்பதி தப்பியோட்டம்

வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட நபர் - இளம் தம்பதி தப்பியோட்டம்

அனுராதபுரம் - கலாவெவ, வலவேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வலவேகம பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டை கொலை செய்யப்பட்ட நபர் வேறு பிரதேசத்தை சேர்ந்த தம்பதியருக்கு வாடகைக்கு விட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த தம்பதியினர் நேற்று முன்தினம் முதல் வீட்டை விட்டு வெளியேறி தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட நபர் - இளம் தம்பதி தப்பியோட்டம் | One Person Killed In Anuradhapura Couple Escape

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.