கல்வி அமைச்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிரடியாக கைது

கல்வி அமைச்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிரடியாக கைது

பத்தரமுல்லயில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (2) இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சற்று முன்னர் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்ட பொலிஸாரில் ஒரு உப பொலிஸ் பரிசோதகர், 2 கான்ஸ்டபிள்கள் என மூவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆசிரியர் சேவையில் தம்மை நிரந்தரமாக இணைத்துக்கொள்ளுமாறு கோரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.