யாழில் நேர்ந்த கொடூரம் ; பசு மாட்டை திருடி இறைச்சியாக்கிய மூவர் கைது

யாழில் நேர்ந்த கொடூரம் ; பசு மாட்டை திருடி இறைச்சியாக்கிய மூவர் கைது

யாழ்பாணத்தில் உள்ள பொது நூலகத்தில் பசு மாட்டை திருடி இறைச்சி விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையி்ல்,

மேச்சல் தரையில் மேச்சலுக்காக கட்டப்பட்ட பசு மாட்டைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்த பொதுநூலக ஊழியர் உட்பட்ட இருவர் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் நேர்ந்த கொடூரம் ; பசு மாட்டை திருடி இறைச்சியாக்கிய மூவர் கைது | Jaffna Three Arrested Stealing Cow Turning Meat

குறித்த சம்பவமானது சாவகச்சேரி நகரசபையின் நுணாவில் பொது நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த புதன்கிழமை நுணாவில் பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள காணியில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட பசுமாடு காணமல் போயுள்ளது.

இந்தநிலையில், பசுவின் உரிமையாளரும் அப்பகுதி இளைஞர்களும் இன்று பகல் தேடுதல் நடத்திய போது நூலக மதிலுக்கு அருகில் பசுமாட்டின் தலை உட்பட்ட பாகங்களைக் கண்டுள்ளனர்.

யாழில் நேர்ந்த கொடூரம் ; பசு மாட்டை திருடி இறைச்சியாக்கிய மூவர் கைது | Jaffna Three Arrested Stealing Cow Turning Meat

இதையடுத்து நூலகத்துக்குள் நுழைந்து பார்த்த பொழுது நூலக குளியலறைக்குள் வைத்து பசுவினை இறைச்சியாக்கிய இரத்தக்கறைகளைக் கண்டுள்ளனர்.

இதனால் நூலக ஊழியர் மீது சந்தேகமடைந்த இளைஞர்கள் ஊழியரை விசாரித்த பொழுது இன்னொருவருடன் இணைந்து புதன்கிழமை கடமை நேரத்தில் மதியம் 1.00 மணியளவில் பசுவினை இறைச்சியாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து மற்றையவரையும் பிடித்த இளைஞர்கள் நூலகத்தை உடனடியாகவே மூடி சாவகச்சேரி காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்து இருவரையும் ஒப்படைத்துள்ளனர்.

இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நாளைய தினம் (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

மேலும், சாவகச்சேரி நகரசபை நூலக ஊழியர் பசுமாட்டைத் திருடி இறைச்சியாக்கி காவல்துறையினாரால் கைது செய்யப்பட்ட விடயம் வெளியில் தெரிந்தால் நகரசபையின் பெயருக்கு அவதூறு ஏற்படும் என தெரிவித்து

இளைஞர்களோடு சமரச முயற்சியில் நகரசபை அதிகாரிகள் சிலர் ஈடுபட்ட போதும் இளைஞர்கள் அதற்கு சம்மதிக்காமல் இப்படியான ஊழியர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.